'பாலியல் தொந்தரவு'...'பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு'...அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 15, 2019 09:40 AM

பாலியல் தொல்லை மற்றும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ,இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIR Filed Against Mohammed Shami For Dowry Harassment And Molestation

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.இவர் மீது அவரின் மனைவி பல்வேறு அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இது கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஷமியின் மனைவி கொடுத்த புகார்களிலேயே மிக முக்கியமானதும்,இந்திய கிரிக்கெட் வாரியத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புகார் தான் ''முகமது ஷமி மீது கொடுக்கப்பட்ட சூதாட்ட பூகார்.உடனே இதுகுறித்து விசாரித்த பிசிசிஐ ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்து, இதனால் கடந்த ஐபிஎல்., தொடரில் பங்கேற்க அவருக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில் இவர்  மீது கொல்கத்தா காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அவ்வப்போது வழக்கு விசாரணைக்கு ஆஜராகி தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.இந்நிலையில் தற்போது ஷமி மீது, ஜாமினில் வெளிவர முடியாத பிரிவு 498 ஏ (வரதட்சணை கொடுமை) மற்றும் பிரிவு 354 ஏ (பாலியல் தொல்லை) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாதம் தொடங்கவிருக்கும் ஐபிஎல் மற்றும் மே மாதம் நடக்கவிருக்கும்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : #CRICKET #IPL #MOHAMMADSHAMI #WORLD CUP 2019 #IPL 2019