'கோலி'...'இவனுக்குள்ள என்னமோ இருந்துருக்கு பாரேன் மொமண்ட்'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 11, 2019 10:07 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில்,ஒரே பந்தில் 18 ஆண்டுகால சாதனையை சமன் செய்து அசத்தினார் இந்திய வீரர்  பும்ரா.

Virat Kohli\'s Reaction To Jasprit Bumrah\'s Hilarious Six at Mohali

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 358 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது.

‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்யை’ தேர்வு செய்தார்.துவக்க வீரர்களாக களமிறங்கிய  ரோகித் சர்மா (95), தவான் (143) கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில்,9 விக்கெட்களை இழந்து 358 ரன்கள் எடுத்தது.இந்நிலையில் போட்டியின் கடைசி பந்தை எதிர்கொண்ட பும்ரா 19 வருட சாதனையை சமன் செய்தார்.

11-வது வீரராக களமிறங்கிய பும்ரா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.இதன் மூலம் கடந்த 2000ல்ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் சாதனையை பும்ரா சமன் செய்தார்.அதோடு ஒரு நாள் போட்டியில் பும்ரா அடித்த முதல் சிக்சர் இது தான். இவர் பங்கேற்ற 100 சர்வதேச போட்டியில் பும்ரா இம்மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்நிலையில் பும்ரா அடித்த சிக்ஸரை பெவிலியனிலிருந்து பார்த்து கொண்டிருந்த கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள்.

Tags : #VIRATKOHLI #CRICKET #JASPRIT BUMRAH #INDIAVSAUSTRALIA #MOHALI