'என் கண்ணு முன்னாடியே சுட்டு கொன்னுட்டீங்களே'...கணவன் கண்முன் உயிரிழந்த இளம்பெண்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 18, 2019 10:14 AM
கணவருடன் மசூதிக்கு சென்ற பெண் அவரது கண்முன்பே சுட்டு கொல்லபட்ட கொடூரம் கேரளாவில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் இந்தியர்கள் ஐந்து பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேரும் பலியாகியுள்ளனர்.இந்த கோர சம்பவத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணும் உயிரிழந்திருப்பது கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரைச் சேர்ந்தவர் அன்சி அலிபாவா.23 வயதான அன்சி, அங்குள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்து வந்தார்.கடந்த வருடம் நியூசிலாந்து சென்ற அன்சி,கணவர் அப்துல் நாசருடன் நியூசிலாந்தில் வசித்து வந்தார்.சம்பவம் நடந்த அன்று பெண்கள் பகுதியில் தொழுகையில் இருந்த போது,அந்த கோரமான துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.அதில் கணவரின் கண்முன்பே அன்சி சுட்டுக்கொல்லப்பட்டார்.கணவர் அப்துல் நாசர் சில காயங்களுடன் நூலிழையில் உயிர்தப்பினார்.
இந்நிலையில் அன்சியின் உடலை கேரளா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இந்த கடினமான நேரத்தில் கேரள அரசு அன்சி குடும்பத்தினருக்கு பக்கபலமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.