ஹைதராபாத் பவுலர்களை கதற விட்ட சாம்சன்.. சதம் அடித்து விளாசல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 29, 2019 11:02 PM

ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதாராபாத் அணிக்கு வலுவான இலக்கை வைத்துள்ளது.

Samson hits first century of IPL 2019

2019 ஐபிஎல் டி20 லீக்கின் அடுத்த போட்டி இன்று(29.03.2019)   ஹைதராபாத்தில்  நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ரஹானே களமிறங்கினர். இதில் பட்லர் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனை அடுத்து 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் ராஜஸ்தான் அணி எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதாராபாத் அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #SRHVSRR #VIVOIPL #SANJUSAMSON #RAHANE