ரன் மழையில் தோனி- ரெய்னா.. முத்த மழையில் மகள்கள்.. நெகிழ வைக்கும் புகைப்படங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Mar 27, 2019 06:19 PM

ஒருபக்கம் ஐ.பி.எல். மேட்சில் தங்களது அப்பாக்கள் ரன் மழை பொழிந்துக்கொண்டு இருக்க, அவர்களது மகள்கள் இருவரும் முத்த மழையில் நனைந்துக் கொண்டிருந்த புகைப்படக் காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன.

ms dhoni and raina daughters ziva and gracia are friends

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியும், சின்னத் தல ரெய்னாவும் கிரிக்கெட் போட்டியைத் தாண்டியும் பல வருட நண்பர்கள் என்பது உலகமறிந்ததே. மைதானத்தில் இரு வீரர்களும் தங்களது நட்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவொருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பல நேரங்களில் பார்த்திருப்போம். இருவரும் நீண்டகாலமாக நல்ல நட்புடன் இருந்து வருகிறார்கள்.

தங்களுடைய தந்தைகளைப் போன்றே, கேப்டன் தோனி மற்றும் ரெய்னாவின் செல்ல மகள்களான ஸிவா தோனி மற்றும் கிரேஸியா ரெய்னா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் போதெல்லாம் தங்களது நட்பை வெளிப்படுத்திக்கொள்வர். நேற்றும் இதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது.

தலைநகரம் டெல்லியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. போட்டி முடிந்த பிறகு ஸிவா தோனி மற்றும் கிரேசியா ரெய்னா இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவரும் ஒருவரையொருவர் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இந்தக் காட்சியினை ரெய்னா புகைப்படம் எடுத்து '#bestie'என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதேபோல், #Reunited என்று பதிவிட்டு ஸிவா தோனி தனது இன்ஸ்டாகிராமில் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன், ரெய்னா மற்றும் கேப்டன் தோனி ஆகிய வீரர்கள் டெல்லி அணிக்கு எதிராக  ரன்களை அடித்து வீசிக் கொண்டிருந்த நிலையில், அவர்களது மகள்கள் இருவரும் தங்கள் அன்பை பறிமாறிக் கொள்ளும் நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி அனைவரையும் ஈர்த்துள்ளது.

Tags : #MSDHONI #IPL2019 #IPL ##ZIVASINGH ##INSTAGRAM