'உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்'...'கோலி'க்கு இதே போல பண்ணட்டுமா'?...கொதித்தெழுந்த பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Mar 27, 2019 11:18 AM

அஸ்வின் மான்கடிங் முறையில் ஜாஸ் பட்லரை அவுட்டாக்கிய விதம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில்,ட்விட்டரில் அது தொடர்பாக கருத்து மோதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.அஸ்வின் செய்ததை போன்று உலகக்கோப்பை போட்டியின் போது,ஸ்டோக்ஸ் கோலிக்கு செய்தால் அதை ஏற்று கொள்வீர்களா? என கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.

Many People asked if Ben Stokes would \'Mankad\' Kohli in a crunch match

ஐபிஎல் 2019 சீசனில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதனாத்தில் மோதின. அப்போது 13வது ஓவரை அஸ்வின் வீசும் போது,ராஜஸ்தான் வீரர் பட்லர் பந்துவீச்சாளர் பக்கம் இருந்தார்.

ஆனால்  பந்து வீசப்படுவதற்கு முன்பே பட்லர் க்ரீஸுக்கு வெளியே செல்வதை அறிந்த அஸ்வின்,பந்தை வீசாமல் 'மான்கடிங்' முறையில் ஜாஸ் பட்லரை அவுட் செய்தார்.பட்லர் களத்தில் இருக்கும் வரை ராஜஸ்தான் வெற்றி பெரும் சூழ்நிலையில் இருந்தது.ஆனால் அஸ்வின் அவரை வீழ்த்திய பின்பு ராஜஸ்தான் வெற்றி பெற முடியாமல் போனது.

இதனிடையே இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களான வாகன், ஜோன்ஸ், வார்னே ஆகியோர் அஸ்வினுக்கு எதிராக தங்களின் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.இதுகுறித்து பதிவிட்டுள்ள வார்னே ''கோலிக்கு இதே செயலை ஸ்டோக்ஸ் செய்திருந்தால் அதனை ஏற்பீர்களா என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டோக்ஸ் '' என்னிடம் நிறைய பேர் இதே விஷயத்தை கோலிக்கு செய்வீர்களா என்று கேட்கிறார்கள்.நானும் அவரும் நிச்சயமாக உலகக் கோப்பை ஆடத்தான் போகிறோம். அப்படி ஆடும் போது இது போன்ற சூழல் வந்தால் செய்யவே மாட்டேன்" என்று கூறியுள்ளார்.