ஏன் 'பட்லர்' அப்படி பண்ணுனாரு?...'அதிர்ச்சியில் உறைந்து நின்ற அஸ்வின்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 26, 2019 03:34 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டி தான் தற்போது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Buttler refuses to shake hands with Ashwin video goes viral

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின.இந்த போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது.இதனிடையே போட்டியின் போது அஸ்வின் விக்கெட் எடுத்த விதம் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் 13 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார், ஜோஸ் பட்லர் ரன்னர் திசையில் நின்றுக் கொண்டிருந்தார். அஸ்வின் 13 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை வீசும் போது, பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அஸ்வின் "மன்கட்" முறையில் ரன் அவுட் செய்தார்.

அதாவது ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது.எனவே அந்த விதியின் படி தான் தான் விக்கெட் எடுத்ததாக அஸ்வின் கூறினாலும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.பட்லர் தனது விக்கெட்டை இழந்த பின்பு தான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

இதனிடையே போட்டி முடிந்த பின்பு வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்வது வழக்கம்.அந்த வகையில் அஸ்வின் கைகுலுக்க சென்ற போது பட்லர் அதனை தவிர்த்து விட்டு சென்றுவிட்டார்.அதனை அஸ்வின் அதிர்ச்சியாக பார்க்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.