'ஏன் அப்படி பண்ணீங்க அஸ்வின்'?...இது 'ஜென்டில்மேன் கேம்' இல்ல...தொடங்கியது மோதல்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 26, 2019 11:43 AM

23'ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் தற்போது தான் களைகட்ட தொடங்கியிருக்கிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.இந்த போட்டி தான் தற்போது பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது.

Harsha Bhogle and Shane Warne get into a heated debate

நேற்று நடைபெற்ற போட்டியில் ஜோஸ் பட்லரை ‘மன்கடட்’ செய்தார் அஸ்வின்.இது பெரும் சர்ச்சையாக தற்போது உருவெடுத்துள்ளது.விதி படி இது சரியாக இருந்தாலும் ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் இது முற்றிலும் இழிவான ஒரு செயல் என பல்வேறு முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இது தொடர்பாக தற்போது ட்விட்டரில் கடுமையான விவாதம் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஹர்ஷா போக்ளே மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் ட்விட்டரில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.ட்விட்டரில் தனது கருத்தினை பதிவிட்டுள்ள்ள ஷேன் வார்ன் 'ஒரு சாதாரண நபராகவும் கேப்டனாகவும் அஸ்வினின் செயல் எனக்கு கடுமையான ஏமாற்றத்தை அளித்தது.அவரிடம் இருந்து இப்படி ஒரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை.

நாம் ஐபிஎல் போட்டிகளில் உணர்வு பூர்வமாக விளையாடுவோம் என உறுதி மொழி எடுத்துள்ளளோம்.அஸ்வின் பந்தை வீசுவதற்கான எந்த வித நோக்கத்தையும் காட்டவில்லை.அதிலிருந்தே தெரிகிறது,இது டெட் பால் என்று.பிசிசிஐ இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.ஐபிஎல் போட்டிகளுக்கு இது அழகும் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள  ஹர்ஷா போக்ளே ' அஸ்வின் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை.அதேபோன்று எந்த விதிமுறைகளிலும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என சொல்லப்படவில்லை.இதே சூழ்நிலையில்  விக்கெட் கீப்பர் இருந்தால் அவர் ஸ்டம்பிங் செய்யும் போது எச்சரிக்கை கொடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஷேன் வார்ன் ' உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை ஹர்ஷா.நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்.இது மிகவும் இழிவான செயல்.பிசிசிஐ நிச்சயம் இதனை ஆதரிக்காது என நம்புகிறேன் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஹர்ஷா போக்ளே பதிலளிக்க,தொடர்ந்து ஷேன் வார்ன் பதிவிட அவர்களின் விவாதம் தொடர்ந்தது.இருவரின் விவாதமும் ட்விட்டரில் புயலை கிளப்பியுள்ளது.

Tags : #CRICKET #IPL2019 #IPL #BUTTLER #HARSHA BHOGLE #SHANE WARNE