"தலைநகரம் முழுதும் தல நகரமாய்".. சென்னை அணி வீரரின் வைரலான தமிழ் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 27, 2019 11:20 AM

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிக்கும் இடையேயான லீக் போட்டி நிகழ்ந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 147 ரன்களை குவித்திருந்தது.

harbhajan singh tweet in Tamil about CSKvDC match goes trending

சென்னை அணி இறுதியாக 19.4 ஓவர்களில் இலக்கை அடைந்து டெல்லியை விழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிகபட்சமாக வாட்சன் 44 ரன்களும் ரெய்னா 30 ரன்களும் தோனி 32 ரன்களும் எடுத்திருந்தனர். முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இந்த வெற்றியை கைப்பற்றி 4 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ் ட்வீட் வைரலாகியுள்ளது.  அதில்,‘வரவேற்றது வேணும்னா நீங்களா இருக்கலாம். ஆனா வழியனுப்பி வைக்கிறது எப்பவுமே நாங்கதான். காற்றைக்கிழித்து பறக்கும் என் சென்னை ஐபில் கொடி நிழலில் டெல்லி கேபிடல்ஸ் இளைப்பாற தலைநகரம் முழுதும் தல நகரமாய் வெற்றி முழக்கத்தில் ஆர்பரிக்க #DCvsCSK டில்லிக்கு நீ பாதுஷான்னா மெட்றாசுக்கு நான் கபாலி’என்று எழுதப்பட்டுள்ளது.

Tags : #IPL #IPL2019 #HARBHAJANTURBANATOR