'எங்கள யாராலும் அசைக்க முடியாது'...'ஹாட்ரிக்'...சாதனை படைத்த இந்திய அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 02, 2019 10:30 AM

டெஸ்ட் அரங்கில் அணி அசைக்க முடியாத இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

India have retained the ICC Test Championship Mace

'டெஸ்ட் சாம்பியஷிப் மேஸை' பெறுவது என்பது ஒவ்வொரு அணிக்கும் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம்.அந்தவகையில் டெஸ்ட் அரங்கில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக,டெஸ்ட் சாம்பியஷிப் மேஸை இந்திய அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.அதோடு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையும் இந்திய அணி பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆண்டுதோறும் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்தில் இருக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் மற்றும் பரிசுத்தொகை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசைக்கான நாள் நேற்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் இருப்பதால்,இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியஷிப் மேஸ் மற்றும் ஐசிசி வழங்கும் பரிசுத்தொகை உறுதியானது.

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய சாதனையை படைத்து அசத்தியது.இது டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தை பிடிப்பதற்கு உறுதுணையாக அமைந்தது.இதனிடையே 50 ஓவர்கள் உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்பு,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற இருக்கிறது.இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #VIRATKOHLI #BCCI #ICC TEST CHAMPIONSHIP #CHAMPIONSHIP MACE