'சாம்பியன்ஸோட மோதும் ஆர்சிபி '...'சூப்பர் கிங்ஸின் பெரிய பலவீனம்'....'தல'யா....கிங் கோலி'யா' ?

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 23, 2019 01:40 PM

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது.2019 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 12வது சீசன் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது.இதன் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,கோலி தலைமையிலான ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.இந்த போட்டியானது சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

Royal Challengers Bangalore Face Tough Test In Chennai Super Kings

ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக  2008ம் ஆண்டு தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வென்றது.எனவே இந்த முறை நிச்சயம் சென்னை அணியினை வென்று பலநாள் கனவை நனவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே போன்று 2014ம் ஆண்டு தான் கடைசியாக ஆர்சிபி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியுள்ளது.என இன்றைய போட்டி மிகவும் கடுமையாக இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இங்கிடி தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருப்பது சென்னை அணிக்கு பெரும் பலவீனமாக கருதப்படுகிறது.சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சு ஷரதுல் தாக்கூர் மற்றும் மோஹித் ஷர்மாவை நம்பியே உள்ளது.அதேநேரத்தில் நல்ல ஸ்பின்னர்கள் இருப்பது பெரிய பலமாக கருதப்படுகிறது.ஜடேஜா கட்டாயம் அணியில் இடம்பெற வேண்டும். அவருக்கு பலம் சேர்க்கும் விதமாக தாஹிர், சாண்ட்னர், கரண் ஷர்மா மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இருப்பார்கள்

எனவே முதல் போட்டியே நிச்சயம் சென்னை மற்றும் பெங்களூரு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.