‘தொடர் தோல்வி எதிரொலி’.. ‘ஆர்சிபியில் இணைந்த பிரபல வீரர்’..கொண்டாடத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 02, 2019 12:50 AM

ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஒருவர் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

IPL 2019: Marcus Stoinis to join Royal Challengers Bangalore

ஐபிஎல் டி20 தொடரின் நடந்து முடிந்த முதல் மூன்று போட்டியிலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதனை அடுத்து நடந்த மும்பைக்கு எதிரான டி20 போட்டியிலும் ராயல் சேலஞ்சர்ஸ் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து நடந்த சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 231 என்ற இமால இலக்கை நிர்ணயித்தது. ஆனால் இப்போட்டில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு புதிதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் சேர உள்ளார். இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : #IPL #IPL2019 #RCB #VIRATKOHLI #VIVOIPL #PLAYBOLD