'ஆஹா'...'என்னமா பௌலிங் போடுறான்'...வியந்த 'பிரபல இந்திய வீரர்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 02, 2019 09:34 AM

எனக்கு எல்லா திறமைகளும் இருக்கு ஆனால் வாழ்க்கையில் சாதிக்க முடியவில்லை என பலரும் கூறுவதுண்டு.ஆனால் இரண்டு கைகள் இல்லாதபோதும் சிறுவன் ஒருவன் பந்து வீசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Without hands boy bowling video goes viral

தற்போது ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.அதனை தொடர்ந்து உலகக்கோப்பை போட்டிகள் அணிவகுத்து நிற்கின்றன.அதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால்,ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள்.வீதிகளிலும்,தங்களின் வீட்டிற்கு அருகிலும் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்வது வழக்கம்.அந்த வகையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு இரண்டு கைகளும் மிக முக்கியமாகும்.

ஆனால் இரண்டு கைகள் இல்லாத போதும் சிறுவன் ஒருவன் பந்து வீசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.கைகள் இல்லை என்றால் என்ன எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது என்பதை உணர்த்துவது போல அந்த சிறுவனின் செயல் அமைந்துள்ளது.இந்த வீடியோவை கிரிக்கெட் வீரர் ரித்மான் சாஹா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #IPL #IPL2019 #SUNRISERS-HYDERABAD #WRIDDHIMAN SAHA