'முஸ்தபா...முஸ்தபா'...நாளைக்கு 'களத்துல சந்திப்போம் பா'...வைரலாகும் போட்டோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 22, 2019 02:54 PM

ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் பயிற்சியின் போது,சென்னை அணியின் கேப்டன் தோனியும்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியின் கேப்டன் கோலியும் சந்தித்து கொண்ட போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Dhoni and Kohli met during the practice session in chepauk

நாளை தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருக்கின்றன.இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்க இருக்கின்றன.இந்திய கேப்டன் கோலியும்,ரசிகர்களால் தல என

அன்புடன் அழைக்கப்படும் தோனியும் எதிரெதிர் அணியில் மோத இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில்,பயிற்சியின் போது கோலியும் தோனியும் சந்தித்து கொண்டபோது எடுத்த புகைப்படத்தினை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதில் போட்டிக்கு முன்பாக முஸ்தபா...முஸ்தபா என்ற கேப்சனோடு பதிவிட்டுள்ளது.

தோனி சென்னை அணிக்கு முதல் சீசனிலிருந்தே கேப்டனாகவும்,கோலி ஆர்சிபிக்கு 2012ம் ஆண்டிலிருந்து கேப்டனாகவும் இருக்கிறார்கள்.இந்நிலையில் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.