‘கோலி ரொம்ப கோவக்காரருங்க’.. ‘பாத்தாலே பயமா இருக்கும்’.. ரகசியம் உடைத்த வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 24, 2019 08:01 PM

விராட் கோலியின் கோபத்தினை கண்டு தான் அச்சப்படுவதாக இந்திய அணியின் இளம்  விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

IPL 2019: Rishabh Pant says he is scared of Virat Kohli\'s anger

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி அணியின் சார்பாக ரிஷப் பண்ட் விளையாடுகிறார். கடந்த 2016 -ம் ஆண்டுதான் முதன் முதலாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். இந்நிலையில் தற்போது நான்வது முறையாகவும் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் களமிறங்குகிறார்.

இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக களமிறங்கினார். அதில் 4 -வது ஒருநாள் போட்டியில் ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பினை ரிஷப் பண்ட் தவறவிட்டார். இதை பார்த்த கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட்டை கோவமாக பார்க்க இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில்,  நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய ரிஷப் பண்ட், ‘யாரை பார்த்தும் நான் பயப்படமாட்டேன். ஆனால், கோலி கோவப்பட்டால் மட்டும் எனக்கு பயமாக இருக்கும். நாம் எந்தவொரு தவறையும் செய்யாமல் இருந்தால், அவர் ஏன் கோபப்பட போகிறார். நீங்கள் ஒரு தவறு செய்தால், மற்றவர்கள் உங்கள் மீது கோபம் கொள்ளத்தான் செய்வார்கள். தவறுகளில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்’ என்று விராட் கோலி குறித்து அவர் பேசியியுள்ளார்.

Tags : #IPL #IPL2019 #VIRATKOHLI #RCB