'கெட்ட பசங்க சார் இந்த சென்னை பாய்ஸ்'...'உலக அளவில் ட்ரெண்டிங்'...அதிர்ந்த ட்விட்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 22, 2019 10:15 AM

ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்க இருக்கிறது.ஆனால் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே சமூகவலைத்தளங்களில் தெறிக்க விட்டு வருகிறார்கள் சென்னை ரசிகர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட விவகாரத்தில் சிக்கி மீண்டு வந்ததைக் கூறும் ஆவணப்படம் தான் ‘ரோர் ஆப் தி லயன்’.கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக எதிர்பார்த்த ‘ரோர் ஆப் தி லயன்’ நேற்று ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது.

MS Dhoni Roars hashtag becomes worldwide trend in twitter

இதனையடுத்து சென்னை ரசிகர்கள் MSDhoniRoars என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்டாக்கி ட்விட்டரை அதிர வைத்தனர்.இந்த ஆவணப்படத்தில் தோனி பல்வேறு உருக்கமான சம்பவங்களைபகிர்ந்துள்ளார்.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட விவகாரத்தில் சிக்கியபோது நடந்த சம்பவங்கள்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என பல சம்பவங்களை தோனி மிகவும் உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

‘ரோர் ஆப் தி லயன்’  ஆவணப்படத்தை பார்த்த ரசிகர்கள் தோனியை புகழ்ந்து வருகிறார்கள்.இதற்காக தான் நாங்கள் வெகு நாட்களாக காத்து கொண்டிருந்தோம்,தோனி தான் எப்போதுமே கெத்து என சென்னை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.