சி.எஸ்.கே. வீரர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்... பிறந்தநாள் விழாவில் வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Apr 01, 2019 05:11 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் பிறந்தநாளையொட்டி, அந்த அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் தனது ஹாட்ரிக் வெற்றியை நேற்று பதிவு செய்தனர். இதன் பின்னர் டிரஸ்ஸிங் ரூமிற்கு சென்ற அந்த அணி வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளெமிங்கின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
இன்று 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்டீபன் ஃபிளெமிங், தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டினார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பிறந்த நாள் விழா பாட்டு பாட, சின்ன தல ரெய்னாவிற்கு, ஸ்டீபன் ஃபிளெமிங் கேக் ஊட்டினார். அதன்பின்னர் அவருக்கு ரெய்னா கேக் எடுத்து ஊட்டினார். தல கேப்டன் தோனியும் தன் பங்கிற்கு கேக் எடுத்து ஊட்ட அங்கே கொண்டாட்டங்கள் மட்டுமே திளைத்தது.
இந்தக் கொண்டாட்டத்தை வீடியோ எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான முரளி விஜய்க்கும் இன்றுதான் பிறந்தநாள். முன்னதாக நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்து, வெற்றிபெற்று, தனது அணி பயிற்சியாளருக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளது.
