‘இனி நிகிடிக்கு பதில் இவருதான்’.. சிஎஸ்கேவில் விளையாட வரும் பிரபல வீரர்..வெளியான புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 30, 2019 09:07 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடிக்கு பதிலாக நியூஸிலாந்து வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

IPL 2019: CSK announces Lungi Ngidi\'s replacement for the season

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியது. டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை(31.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்நிலையில் காயம் காரணமாக லுங்கி நிகிடி இப்போட்டியில் இருந்து விலகினார். மேலும் சென்னை அணியின் மற்றொரு வெளிநாட்டு வீரரான டேவிட் வில்லேவும் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.

இதனை அடுத்து லுங்கி நிகிடிக்கு பதிலாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த ஸ்காட் குஜ்ஜெலின் என்னும் இளம் வீரர் சென்னை அணியில் இணைந்துள்ளார். ஆல் ரவுண்டரான இவர் இதுவரை 2 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இந்தியாவில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஸ்காட் குஜ்ஜெலின் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #IPL #IPL2019 #CSK #WHISTLEPODUARMY #YELLOVEAGAIN