'இதுனால தான் 'தல'ய எல்லாருக்கும் பிடிக்குது'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Apr 01, 2019 02:50 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பெற்றது.

Dhoni has spend time with Rajasthan Royals young players

நேற்று நடைபெற்ற போட்டியில் ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் ரகானே, முதலில் ‘பவுலிங்யை ’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் தோனி 75 ரன்கள் குவித்து அசத்தினார்.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும், ஜோஸ் பட்லர் 6 ரன்களிலும் சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய ராகுல் திரிபாதி நிதானமாக ஆடி 39 ரன்கள் எடுத்தார். ஸ்டீவன் ஸ்மித் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனையடுத்து, சென்னை அணி போட்டியிட்ட 3 போட்டிகளும் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு  ராஜஸ்தான் ராயல் அணியின் இளம் வீரர்கள் சிலர் தோனியுடன் வந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.அதோடு அவர்களுடன் சகஜமாக சிரித்து பேசி சில மணித்துளிகள் இளம் வீரர்களோடு தோனி செலவிட்டார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.