‘இது மட்டும் நடக்காம போயிருந்தா’.. நூலிழையில் அவுட் ஆகாமல் தப்பிய ‘தல’தோனியின் வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 01, 2019 12:49 AM

ராஜஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தோனி நூலிழையில் அவுட்டாகாமல் தப்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Watch: Dhoni survives after ball hits stumps but bails don\'t dislodge

ஐபிஎல் டி20 தொடரின் 12 -வது லீக் போட்டி இன்று(31.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அம்பட்டி ராயுடு மற்றும் வாட்சன் களமிறங்கினர். அதில் அம்பட்டி ராயுடு 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து களமிறங்கிய ரெய்னா அதிரடியாக ஆடி 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் தோனி மற்றும் ப்ராவோ கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 27 ரன்களில் ப்ராவோவும் அவுட்டாகினார். 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 75 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 167 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் போட்டியின் 6 ஓவரின் போது ராஜஸ்தான் பந்துவீச்சாளர் வீசிய பந்து தோனியின் காலில் பட்டு ஸ்டெம்புக்கு அருகே மெதுவாக சென்று உருண்டோடும். இதனால் தோனி நூலிழையில் அவுட்டகாமல் தப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #CSKVRR #MSDHONI #YELLOVEAGAIN #VIVOIPL #WHISTLEPODU