‘தல மேட்சுல அடி வெளுக்க.. 7 டீமும் கப்பாவது மேட்சாவதுன்னு'... சூப்பர் டீலக்ஸ் ஸ்டைலில் CSK வீரரின் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 01, 2019 01:34 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்களிடையே பலத்த பாராட்டை பெற்று வருகிறது.

Harbhajan tweets about CSKs victory using super deluxe dialogues viral

சேப்பாக்கம் சிதம்பரம் நேற்று(மார்ச் 31) இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை அணியை பேட் செய்ய கோரியதை அடுத்து, முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்திருந்தது.

அதன் பின்னர் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. இதில் ரெய்னாவின் நிதானமான ஆட்டம், வாட்சன் விளாசிய சிக்ஸர், பிராவோவின் அதிரடியான ஆட்டம், 20வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் தோனி ஸ்கோர் செய்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் அனைத்தும் சென்னை ரசிகர்கள் மட்டுமல்லாது ஐபிஎல் ரசிகர்களையே மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இந்த வெற்றிக்கு பிறகு தமிழில் ட்வீட் பதிவிட்ட , சென்னை வீரர் ஹர்பஜன் சிங், சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரெய்லரில் வரும் வசனத்தை வைத்து இந்த மேட்சில் சென்னை அணியின் வெற்றியையும் தோனி உள்ளிட்ட வீரர்களின் அதிரடியான ஆட்டத்தையும் விவரித்துள்ளார்.

அதில், ‘ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த, அந்த டீம் தடைய தாண்டி தோனியை புடிச்சி தொங்க, அந்த #தல மேட்சுல அடி வெளுக்க, என்னடா இழவு வாழ்க்கன்னு மேல பாத்தா ஐபிஎல் கப்பு கீழ சென்னை சூப்பர் கிங்ஸ். ஏழு டீமும் கப்பாவது மேட்சாவதுன்னு, கும்புடு போட்டு ஆஹானு சொன்னா. அதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ்’ என்று ட்வீட் பதிவிட்டுள்ளார்.  மேலும் SuperDeluxe படத்தில் இருந்து இந்த வசனத்தை பேசியதால், அப்படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி சொல்லும் விதமாக, ‘நன்றி சேது ஜி’என்றும் குறிப்பிட்டுள்ள ஹர்பஜனின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.