‘சிஎஸ்கேவில் இருந்து விலகிய மற்றொரு பிரபல வீரர்’.. காரணம்?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 30, 2019 12:51 AM
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் நிகிடி விலகிய நிலையில் மற்றொரு வீரர் விலகியருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் டி20 லீக் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான அடுத்த டி20 லீக் டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை சேப்பாக்கத்தில் வரும் மார்ச் 31 -ம் தேதி நடைபெற இருக்கும் அடுத்த டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாகவே காயம் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி விலகினார். இந்நிலையில் சென்னை அணியின் மற்றொரு வெளிநாட்டு வீரரான டேவிட் வில்லேவும் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.
இவர் சில தினங்களில் சென்னை அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டேவிட் வில்லேவின் மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளதால் அவர் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
