'எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது'?...அதிரடி நடவடிக்கையில் சிக்கிய ரஹானே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Jeno | Apr 01, 2019 04:30 PM
தொடர் தோல்விகளால் சோகத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு,ஐபிஎல் நிர்வாகம் எடுத்திருக்கும் புதிய நடவடிக்கையால் மீண்டும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில், 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அத்துடன், தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.இது சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
இதனிடையே தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்திருப்பது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக போட்டி நடுவர்கள் புகார் அளித்தனர்.இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் உத்தரவிட்டது.இது அந்த அணி நிர்வாகத்திற்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.
