‘பஞ்சாப் அணியை பொளந்து கட்டிய ரசல், ரானா’.. இமால இலக்கை வைத்த கொல்கத்தா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 27, 2019 11:00 PM

கொல்கத்தா அணி வீரர்கள் அதிரடியாக ஆடி பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கை வைத்துள்ளனர்.

IPL 2019: Andre Russell powers KKR to massive target

கிங்ஸ் லெவன் பஞ்சாப்-கொல்கத்தா அணிகளிகளுக்கு இடையேயான 6 -வது ஐபிஎல் டி20 லீக் போட்டி இன்று(27.03.2019) கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். 20 ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 என்ற இமால இலக்கை வைத்தது. இதில் ராபின் உத்தப்பா(67), நிதிஷ் ரானா(63) ஆகியோர் அரை சதத்தைக் கடந்தனர். மேலும் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரான ரசல் 17 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் 5 சிக்சர்கள், 3 பவுண்ட்ரிகள் அடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #KKRVKXIP #RUSSELL