‘ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 21 தடவை’!.. தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன ‘மைக்ரோசாப்ட் சிஇஓ’.. அப்படி என்ன பண்ணாரு?

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Feb 25, 2020 05:53 PM

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைப்பாடுகளை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர் சுரேஷ் செல்லதுரை என்பவருக்கு அதன் சிஇஓ நன்றி தெரிவித்துள்ளார்.

Microsoft CEO Satya Nadella thanked 21 year old Suresh Chelladurai

பெங்களூரில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ளது மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெள்ள கலந்துகொண்டு பேசினார். அப்போது மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டுபிடித்து அதை சுட்டிக்காட்டிய இளைஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கடந்த 2018ம் ஆண்டு மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடித்து பரிசு பெற்றவர்களில் முக்கியமானவர் சுரேஷ் செல்லதுரை (21). தமிழகத்தை சேர்ந்த இவர் மொத்தம் 21 முறை மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்துள்ளார்.

அதேபோல் பஞ்சாப் மாநிலம் லூதியானவைச் சேர்ந்த 13 வயது நம்யா ஜோஷிக்கும் சத்ய நாதெள்ள நன்றி தெரிவித்துள்ளார். இவர் மைக்ரோசாப்டின் மைன்கிராப்ட் வீடியோகேம் மற்றும் ஸ்கைப் செயலியைப் பயன்படுத்தி சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MICROSOFT #CEO #SATYANADELLA #SURESHCHELLADURAI #NAMYAJOSHI #THANKED