இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கி பரிதாபமான குழந்தைகள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Mar 25, 2019 05:46 PM

இஸ்ரேல் நாட்டின் மிஷ்மீரட் எனும் நகரத்தில் ராக்கெட் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அந்நாட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அந்நாட்டை அதிரவைத்துள்ளது.

israel 7 wounded tel aviv in gaza rocket attack

விளைநிலங்கள் நிறைந்த இப்பகுதியில் அதிகாலையில் வீடுகளில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் ராக்கெட் ஒன்று அங்கிருந்த வீடுகளின் மீது விழுந்தது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பாலஸ்தீன கடற்கரையிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மிஷ்மீரட் பகுதியை குறிவைத்து இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாஷிங்டன் சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.  தாக்குதல் நடைபெற்றப் பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.   இஸ்ரேலில் வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக இஸ்ரேல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எந்த பாலஸ்தீன அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ##ISRAEL ##GAZAATTACK