ஆணாக மாறிய பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை..! ஆச்சரியப்பட வைத்த திருநம்பி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 08, 2019 04:00 PM

அமெரிக்க நாட்டில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிக்கு ஆண் குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Transgender man opens up about being pregnant, giving birth

பொதுவாக ஆணாக பிறந்தவர்கள், தங்களை மனதளவில் பெண்ணாக உணர்வதால் அவர்கள் அறுவைச் சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறுகிறார்கள். இவர்கள் திருநங்கை என்று அழைக்கப்படுகின்றனர். அதுபோல், பெண்ணாக பிறந்து, ஆணாக மாறுபவர்களை திருநம்பி என கூறுகின்றனர்.

மருத்துவ உலகில் திருநங்கைகளுக்கு குழந்தை பிறப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று என கூறுகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த திருநம்பி ஒருவருக்கு ஆண் குழந்தைப் பிறந்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அண்டோனியா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் வைலே சிம்ப்சன். இவர் தனது 21 -வது வயதில் அறுவைச் சிகிச்சையின் மூலம் பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ளார். தற்போது 28 வயதான இவர், ஸ்டீபன் கீத் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருநம்பி சிம்ப்சனுக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. ஆனால் தற்போதுதான் இந்த செய்தி வெளியாகியுள்ளது. மேலும் சிம்ப்சன் தனது குழந்தையுடன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முகத்தில் மீசை, தாடியுடன் வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் சிம்ப்சனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags : #AMERICA #TRANSGENDER #BABY #BIZARRE