'மெஷினில் மாட்டிக்கொண்ட விவசாயி'... 'அதிர வைத்த விபரீத செயல்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 21, 2019 04:39 PM

தானியக் கிடங்கு மெஷினில் சிக்கிய விவசாயி ஒருவர், உயிர் பிழைக்கும் பொருட்டு தனது காலை தானே துண்டித்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

the farmer in US who cut off his leg with a pocket knife

அமெரிக்காவின் வடகிழக்கு நெப்ரஸ்கா மாநிலத்தைச் சேர்ந்தவர், 63 வயதான கர்ட் கசேர் என்ற விவசாயி. இவர், தனது விவசாய நிலத்துக்கு அருகில் தானிய சேமிப்பு கிடங்கு ஒன்றை அமைத்துள்ளார். இந்த சேமிப்புக் கிடங்கில், ஒரு கலனிருந்து மற்றொரு கலனுக்கு கன்வேயர் பெல்ட் போன்ற இயந்திரம் மூலம் சோளமணிகளை விவசாயி கசேர் மாற்றியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரத்தின் வளைந்த பிளேடுகளுக்குள், அவரது இடது கால் சிக்கிக் கொண்டுள்ளது. அப்போது அங்கு யாரும் இல்லாத நிலையில் இயந்திரத்தை நிறுத்த முடியாமல் வலியில் கசேர் துடித்து கதறியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த கசேர், உதவி கேட்பதற்காக தனது செல்போனை பாக்கெட்டில் தேடியுள்ளார்.

ஆனால் செல்போன் அகப்படாமல் போகவே, தான் வைத்திருந்த சிறு கத்தியின் மூலம் காலை துண்டித்து இயந்திரத்தின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளார். பின்பு அவரை மீட்டு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சேர்த்தனர். உதவிக்கு யாரும் அருகிலில்லாத சமயத்தில், அவர் மேற்கொண்ட துணிகர செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #AMERICA #FARMER