ஒரே ஒரு டுவீட் தான்.. மொத்த கடையும் காலி.. வைரலான டோனட் கடை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 11, 2019 06:07 PM

அமெரிக்காவில் டோனட் கடை ஒன்று டுவிட்டர் மூலம் பிரபலமாகி வைரலாகி வருகிறது.

Donut shop viral on social media

அமெரிக்காவில் மெஸ்சூரி நகரில் பில்லி என்பவரின் தந்தை புதிதாக டோனட் கடை ஒன்றை தொடங்கியுள்ளார். புதிய கடை என்பதால் கடைக்கு டோன்ட்களை வாங்க யாரும் வரவில்லை.

இதனால் பில்லியின் தந்தை மனமுடைந்து போயுள்ளார்.இதனை அறிந்த பில்லி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புதிதாக திறக்கப்பட்ட எனது தந்தையின் டோனட் கடையில் ஒரு டோனட் கூட விற்கவில்லை. இதனால் எனது தந்தை மிகவும் வருத்ததுடன் உள்ளார்’ என பில்லியின் தந்தை கடையில் இருக்கும் புகைப்படம் மற்றும் கடையின் முகவரியையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

பில்லியின் இந்த பதிவு சில மணிநேரங்களில் அதிகம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வைரலானது. இதனை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பகிரப்பட்டதன் விளைவாக டோனட்களை வாங்க பலரும் கடைக்கு குவிந்துள்ளனர். இதனால் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் சிறிது நேரத்தில் விற்று தீர்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த பில்லி தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதள நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #AMERICA #BILLYSDONUTS #FOOD #VIRALNEWS