'ஹோட்டல் கிச்சனில் பண்ற வேலையா இது?'... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | May 30, 2019 04:44 PM
உணவகம் ஒன்றின் சமயலறையில் உள்ள பாத்திரங்கள் கழுவும் பெரிய தொட்டியில், ஊழியர் ஒருவர் குளிக்கும் வீடியோ காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், வெண்டேஸ் (wendeys) துரித உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் வேலைபார்க்கும் ஊழியர் ஒருவர், அண்மையில் சமயலறையின் பாத்திரம் கழுவும் தொட்டியில் சோப்பு நீரை நிரப்பி, உற்சாக குளியலிட்டார்.
இவரது செயலை அங்குள்ள சக ஊழியர்கள் கிண்டலடித்து சிரிக்கும் வீடியோ காட்சியானது, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைப் பகிர்ந்த பலரும், ஊழியரின் செயல் அருவறுப்பாக உள்ளதாக கூறியதோடு, அவரது செயலுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த உணவக உரிமையாளர், உணவகத்தின் நன்மதிப்பை கெடுத்ததாக ஊழியரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
Tags : #AMERICA #WENDY #KITCHEN #RESTAURAENT
