'அணில் செய்யும் வேலை'... 'வைரலாகும் புகைப்படம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | May 24, 2019 04:49 PM

சாதுவான உயிரினமான கருதப்படும் அணில், பாம்பை கடித்து குதறுவது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

viral photos show a squirrel biting a snake in texas

அமெரிக்காவின் தேசிய பூங்கா அமைப்பினால் இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த படமானது, குவாடலூப் (Guadalupe) மலை தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணில்கள் பொதுவாக தாவரங்கள், பழங்கள் மற்றும் கொட்டைகளை உண்ணுபவை என்றாலும், அவற்றின் சாதுவான தோற்றத்தை பார்த்து ஏமாந்து விடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. பறவைகளின் முட்டைகள், பல்லிகளையும் உண்ணும் அணில், சமயத்தில் பாம்புகளையும் இரையாக்கிக் கொள்ளும் என ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா ஆய்வாளர் ஒருவரால் 2009-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. படம் எடுக்கப்பட்ட சமயத்தில் குட்டிகளுக்கு பாலூட்டி வந்த அணிலுக்கு இருந்த கூடுதலான பாதுகாப்பு உணர்வினாலேயே, பாம்பை பார்த்ததும் அவ்வாறு கடித்து குதறியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #SQUIRREL #BITE #SNAKE #NATIONALPARK #VIRAL