தேர்தலில் போட்டியிட்டு மேயரான ‘ஆடு’.. வியக்க வைக்கும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Selvakumar | Mar 10, 2019 12:32 PM
அமெரிக்காவில் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு ஆடு மேயரான சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வெர்மாண்ட் மாநிலத்தில் உள்ள சுமார் 2500 பேர் வசிக்கும் ஃபேர் ஹேவன் என்கிற சிறிய நகரத்தில் கண்டர் என்பவர் விளையாட்டு மைதானம் கட்டுவதற்காக நிதி திரட்டிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது மேயர் இல்லாத அந்த நகரத்தில் நிதி திரட்டும் நோக்கில் விலங்குகளுக்கு மேயர் தேர்தல் நடத்தியுள்ளார். இதில் நாய், ஆடு, பூனை உள்ளிட்ட 15 விலங்குகளை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்.
நடைபெற்ற இந்த தேர்ததில் ‘லிங்கன்’ என்ற ஆடு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை தோற்கடித்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து புதிய மேயருக்கு பதவியேற்பு விழா எடுக்க கண்டன் திட்டமிடுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் மூலம் 100 அமெரிக்க டாலர்கள் நிதியாக கிடைத்துள்ளதாக கூறிய அவர், இதன்மூலம் மைதானத்தைக் கட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கு தேர்தல் நடத்தி அதில், ஆடு மேயரான சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
