VIDEO: '1270 கிலோ வெடி மருந்து... 671 மீட்டர்... சில விநாடிகளில் சிவப்பாக மாறிய வானம்... கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கா!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகப்பெரும் வானவெடி பட்டாசு அமெரிக்காவின் கொலார்டோ மாநிலத்தில் வெடிக்கப்பட்டு, அதை மக்கள் ஆரவாரத்துடன் ரசிக்கும் வீடியோ இணையப் பயனாளிகளின் இதயத்தைக் கவர்ந்து வருகிறது.

அமெரிக்காவில் உள்ள கொலார்டோ மாநிலத்தில், ஏழு வருடங்களாக தயாரிக்கப்பட்ட வானவெடிப் பட்டாசு சில தினங்களுக்கு முன் வெடிக்கப்பட்டது. சுமார், 1270 கிலோ எடையுள்ள வெடிமருந்துடன், அந்த பட்டாசு 671 மீட்டர்கள் தூரம் வரை விண்ணை நோக்கிப் பயணித்து வெடித்தது. மேலும், உலகிலேயே அதிக எடையுள்ள பட்டாசாக இது கருதப்படுகிறது. இதையடுத்து, இந்த வானவேடிக்கை கின்னஸ் சாதனைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 2018ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் வெடிக்கப்பட்ட வானவெடியே அதிக எடை உடையதாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது.
Tags : #FIREWORKS #GUINESS #RECORD
