‘இந்திய ப்ளேயர்ஸ் யாரும் இத பண்ணல’! ‘இன்னும் ஒரு சிக்ஸ் தான்’! ஹிட்மேனுக்கு காத்திருக்கும் பெரிய சாதனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 05, 2019 05:21 PM

 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இன்னும் சிக்ஸ் அடித்தால் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைப்பார்.

Rohit Sharma 1 six away from becoming first Indian to reach 400 sixes

இந்திய அணியின் துணைக்கேப்டனான ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். நீண்ட நேரம் களத்தில் நின்று அதிக எண்ணிக்கையிலான ஸ்கோர்களை எடுப்பதில் ரோஹித் ஷர்மா வல்லவர். களத்தில் அடிக்கடி சிக்ஸர்களை பறக்கவிட்டு எதிரணியை திணறடிக்ககூடியவர்.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டி நாளை (06.12.2019) நடைபெற உள்ளது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா ஒரு சிக்ஸ் அடித்தால் 400 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (534) முதல் இடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி (476) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Tags : #CRICKET #BCCI #ROHITSHARMA #SIX #RECORD #INDVWI #T20