VIDEO: 'நிலவில் வாக்கிங்... விண்வெளியில் வேலை... 328 நாட்கள் விண்வெளி சாகசம்... சாதனை படைத்த சிங்கப்பெண்... கொண்டாடித் தீர்த்த நண்பர்கள்!'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Feb 07, 2020 11:14 AM

நீண்ட நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் மற்றும் நிலவில் நடந்த பெண் என்ற பெருமையோடு விண்வெளி வீராங்கனை க்ரிஸ்டினா கோச் பூமிக்கு திரும்பியுள்ளார்.

nasa female astronaut returns to earth after 328 days

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் க்ரிஸ்டினா கோச். கடந்த 2013ம் ஆண்டு விண்வெளி திட்டங்களுக்காக நாசா விண்வெளி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 விண்வெளி வீரர்களுள் க்ரிஸ்டினா கோச்சும் ஒருவர்.

ஆரம்பத்தில் சில மாதங்கள் மட்டுமே விண்வெளி நிலையத்தில் பணியாற்றுவதற்கு அனுப்பப்பட்ட க்ரிஸ்டினா, விண்வெளி சுற்றுலா திட்டத்திற்காக மேலும் சில மாதங்கள் பணியாற்றுமாறு நாசா கேட்டுக்கொண்டது. இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவால் அனுப்பப்பட்டிருந்த நிலையில், ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பின் இந்த ஆண்டு பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என்று நாசா அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தனது 328 நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பூமிக்கு திரும்பினார்.

மேலும் அவர் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த போது, 6 முறை விண்வெளியில் நடந்திருக்கிறார். விண்வெளி சுற்றுலா குறித்த அறிவியல், விண்வெளியில் மனிதர்களின் உடல்நிலை எப்படி இருக்கும் போன்ற ஆய்வுகளையும் அவர் அங்கே மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், 328 நாட்கள் 13 மணி நேரம் 58 நிமிடங்கள் விண்வெளி நிலையத்தில் இருந்ததன் மூலம், அதிக நாட்கள் விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார், க்ரிஸ்டினா.

 

 

Tags : #NASA #ASTRONAUT #RECORD