"உலகத்தோட கடைசி செல்ஃபி எப்படி இருக்கும்??.." AI நுண்ணறிவு சொன்ன பதில்.. "போட்டோ'வ பாத்தவங்க ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டாங்க.."
முகப்பு > செய்திகள் > உலகம்இன்று வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில், நாம் நிறைய புது புது வினோதமான விஷயங்கள் தொடர்பான செய்திகளை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்து போகிறோம்.

Also Read | முன்னணி ஐடி நிறுவனங்களின் ஆஃபருக்கு No.. ரூ.50 லட்சம் சம்பளத்துல.. இளைஞர் தேர்வு செய்த நிறுவனம்.!
அந்த வகையில், தற்போது இந்த உலகின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும் என்பது தொடர்பான செய்தி ஒன்று, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு என கூறப்படும் AI, எதிர்காலம் பற்றி பலவிதமான நுண்ணறிவை வழங்கி வருகின்றது. அந்த வகையில், செல்ஃபி குறித்து ஒரு பதிவும் தற்போது பலரையும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது உண்மைதான். கடந்த பல ஆண்டுகளாகவே, செல்ஃபி மோகம் என்பது மிகப்பெரிய அளவில் பலர் மத்தியில் பரவலாக இருந்து வரும் ஒரு பழக்கமாகும்.
அந்த வகையில், DALL-E என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு, உலகின் கடைசி செல்ஃபியில் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை கணித்து, புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. டிக் டாக்கில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களை பார்க்கும் பலரும் பீதியில் கூட உறைந்து போயுள்ளனர் என்றும் சொல்லலாம்.
ஏனென்றால், AI அமைப்பு வெளியிட்ட புகைப்படங்களில், வெடிகுண்டில் தகர்க்கப்பட்ட பின்னணியோடு, மிகவும் ஒல்லியான உருவத்துடன் ஏலியன் முகம் போன்று சுருங்கிப் போய் மனிதர்கள் இருக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. மேலும், உடல் வடிவமாக இல்லாமல், சில உடலின் கை மற்றும் சில பகுதியில் வீக்கம் அடைந்தும் தலைப்பகுதி ஒல்லியாகவும் இருப்பது போன்றும் இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
OpenAI என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு, GTP-3 மாடல் என்கின்ற அடிப்படையில் இப்படி அச்சத்தில் உறைய வைக்கும் புகைப்படங்களை DALL-E AI சிஸ்டம் உருவாக்கியுள்ளது. GTP-3 என்பது ஆழமாக கற்றுக் கொள்ளுதல் என்ற அம்சம் மூலம், மனிதர்களைப் போலவே உரையாடவும், கதைகள் சொல்லவும், கவிதை எழுதும் வாசிக்கவும் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மொழி சார்ந்த AI டெக்னாலஜி ஆகும். DALL-E என்பது GTP-3-யின் 12 மில்லியன் பாராமீட்டர் ஆகும். இது ஆழமாக கற்றுக் கொள்ளுதல் என்ற செயல்முறை பயன்படுத்துவதன் மூலம் உள்ளிடப்பட்டிருக்கும் சொற்களின் அடிப்படையில் இந்த புகைப்படங்களை உருவாக்கியது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், இந்த நுண்ணுயிர் சேர்க்கையிடம், பூமியில் இருக்கும் மனிதர்களின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது தான், இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் மக்கள் பாதிக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை AI வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதன் உள்ளிருக்கும் விவரங்கள் மற்றும் அதனுடைய ப்ரோக்ராம் ஆகியவற்றின் அடிப்படையில் தான், AI இப்படி செயல்படுகிறது.
இதன் காரணமாக, AI வெளியிட்ட புகைப்படங்கள் சரியானதாக தான் இருக்கும் என்றும் எந்த சான்று கிடையாது. இருந்தாலும், உலகின் கடைசி செல்பி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு இந்த நுண்ணுறிவு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் சற்று ஆடிப் போகத்தான் வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
