Kaateri logo top

சாலையில் இருந்த வித்தியாசமான எச்சரிக்கை பலகை.. நெட்டிசன்களின் கேள்விக்கு டிராஃபிக் போலீசார் கொடுத்த விளக்கம்.. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே.!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Aug 02, 2022 09:06 PM

பெங்களூருவில் இருந்த வித்தியாசமான சாலை எச்சரிக்கை பலகைக்கான அர்த்தத்தை வெளியிட்டுள்ளது போக்குவரத்து காவல்துறை. இந்த ட்வீட் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

new traffic sign on Bengaluru and cops explained him in detail

Also Read | சாலையின் ரெண்டு பக்கமும் நிறுத்தப்பட்ட வாகனங்கள்.. "கடைசி'ல சும்மா கெத்தா குடுத்த என்ட்ரி'ய பாக்கணுமே.." வியக்க வைத்த வீடியோ

போக்குவரத்து தேவை இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனை பூர்த்தி செய்ய மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக பலவிதமான எச்சரிக்கை பலகைகளை சாலை ஓரங்களில் அமைத்து மக்களுக்கு வழிகாட்டுகிறது போக்குவரத்து துறை. இந்நிலையில், பெங்களூருவில் இருந்த வித்தியாசமான எச்சரிக்கை பலகை மக்களை கவர்ந்திருக்கிறது. இதனை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட, அது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வித்தியாசமான எச்சரிக்கை பலகை

பெங்களூருவில் ஹோப்ஃபார்ம் ( Hopefarm) சிக்னல் அருகே இந்த பலகை நிறுவப்பட்டிருக்கிறது. இதனை புகைப்படம் எடுத்த அனிருத்தா முகர்ஜி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், பெங்களூரு போக்குவரத்து காவல்துறையை அதில் டேக் செய்து இந்த சின்னத்தின் அர்த்தம் என்ன? எனக் கேட்டிருந்தார். இந்த ட்வீட் கொஞ்ச நேரத்திலேயே வைரலாக பரவியது.

 

காவல்துறையினர் கொடுத்த பதில்

இந்நிலையில், அனிருத்தா முகர்ஜியின் கேள்விக்கு வைட்ஃபீல்ட் பகுதி போக்குவரத்து காவல்துறையினர் ட்விட்டர் மூலமாக பதில் அளித்துள்ளனர். அது கண்பார்வையற்றவர்கள் அந்த சாலையை பயன்படுத்தலாம் என்பதை உணர்த்திடக்கூடிய சின்னம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அந்த பதிவில்,"ஒரு பார்வையற்ற நபர் சாலையில் இருக்கலாம் (அதனால் நீங்கள் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்) என்று எச்சரிக்கை செய்யும் பலகை அது. இந்த போர்டு வைக்கப்பட்டுள்ள ஹோப் பார்ம் சந்திப்பில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

new traffic sign on Bengaluru and cops explained him in detail

இதனை தொடர்ந்து இந்த ட்வீட் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கும் இந்த சின்னம் குறித்து தெரியாது எனவும் இதனை அறிந்துகொள்ள வாய்ப்பளித்த அனிருத்தா முகர்ஜி மற்றும் காவல்துறையினருக்கு நன்றி எனத் தெரிவிப்பதாகவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | சாலை ஓரத்துல கிடந்த Bag.. உள்ள கட்டுக்கட்டா பணம்.. கொஞ்சம் கூட யோசிக்காம போலீஸ் கான்ஸ்டபிள் செஞ்ச காரியத்தால் நெகிழ்ந்துபோன அதிகாரிகள்..!

Tags : #BENGALURU #TRAFFIC SIGN #COPS #NEW TRAFFIC SIGN #NEW TRAFFIC SIGN ON BENGALURU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. New traffic sign on Bengaluru and cops explained him in detail | India News.