"உங்க ஆசீர்வாதம் வேணும்.." தமிழர் போட்ட ட்வீட்.. மனதை வென்ற ஆனந்த் மஹிந்திராவின் 'REPLY'!!.. வைரலாகும் பதிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, தொழிலில் ஒரு பக்கம் எந்த அளவுக்கு தீவிரமாக இயங்கி வருகிறாரோ, அதே அளவில் ட்விட்டரிலும் ஆக்கப் பூர்வமாக இயங்கக் கூடியவர்.

Also Read | புதுக்கோட்டை கலெக்டரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. வைரலாகும் ட்விட்டர் பதிவு.. பின்னணி என்ன??
அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இணையவாசிகளுக்கு தேவையான தொழில் மற்றும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள், தங்களின் திறனை வெளிப்படுத்தி புது விதமான முயற்சிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள், நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயன்படும் வகையில் தனது பதில்களை தெரிவித்து வருவதை ஆனந்த் மஹிந்திரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இவற்றுள் குறிப்பாக, அடையாளம் தெரியாத நபராக இருந்தாலும், அவர்களின் அசாத்திய திறனை பாராட்டும் வகையில், ஆனந்த் மஹிந்திரா அடிக்கடி செய்யும் ட்வீட்கள், சம்மந்தப்பட்ட நபரை மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களையும் பெறச் செய்யும்.
அந்த வகையில், தமிழர் ஒருவரின் ட்வீட்டிற்கு ஆனந்த் மஹிந்திரா கொடுத்துள்ள Reply, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பலருக்கும் தங்களின் லட்சியம் அல்லது கனவை பின்பற்றி அதில் வென்று காட்ட வேண்டும் என்பது ஒரு இலக்காக இருக்கும். அப்படி கடினமாக உழைத்து, தமிழ்நாட்டை சேர்ந்த அசோக் குமார் என்ற நபர், புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். அவர் வாங்கிய 'மஹிந்திரா XUV700' காருடன் புகைப்படம் ஒன்றையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "10 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பிறகு, புதிய மஹிந்திரா XUV700 கார் வாங்கினேன். உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்" என மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அசோக்கின் ட்விட்டர் பதிவை கவனித்த ஆனந்த் மஹிந்திரா, அதனை பகிர்ந்து, "நன்றி, ஆனால் நீங்கள் தான் உங்கள் தேர்வின் மூலம் எங்களை ஆசீர்வதித்தீர்கள். கடின உழைப்பால் கிடைத்த வெற்றிக்கு வாழ்த்துக்கள். சிறந்த பயணம் மேற்கொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் ஒருவரின் ட்வீட்டிற்கு, ஆனந்த் மஹிந்திரா பதில் தெரிவித்துள்ளது தொடர்பான ட்விட்டர் பதிவுகள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
