முன்னணி ஐடி நிறுவனங்களின் ஆஃபருக்கு NO.. ரூ.50 லட்சம் சம்பளத்துல.. இளைஞர் தேர்வு செய்த நிறுவனம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, ஒருவரின் வாழ்க்கை என்பது, பள்ளிக்கூட படிப்பு, கல்லூரி படிப்பு, அதன் பின்னர் வேலை என அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று கொண்டே இருக்கும்.
அப்படி இருக்கையில், நமது தலையெழுத்தை தீர்மானிக்கும் வேலை என்னும் பகுதியை தீர்மானிக்கும் அடிப்படையைக் கொண்டிருப்பது கல்லூரி படிப்பு தான்.
சிலர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, பல நிறுவனங்களில் தொடர்ந்து வேலைக்காக விண்ணப்பித்துக் கொண்டே இருப்பார்கள். சிலருக்கு ஒரு சில வாய்ப்புகளில் உடனே வேலை கிடைத்தாலும் மற்ற சிலர், பல வாய்ப்புகள் எடுத்துக் கொள்ளும் விஷயங்களும் நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.
இந்நிலையில், ஹரியானா மாவட்டத்தை சேர்ந்த பிடெக் மாணவர் ஒருவருக்கு அடித்துள்ள ஆஃபர் தொடர்பான செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஹரியானா மாவட்டத்தைச் சேர்ந்த பி டெக் மாணவர் மதுர் ராகேஜா. இவரது தந்தை கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், தற்போது மகன் மதுராவுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டத்தை பார்த்து அவர் ஆனந்தத்தில் திளைத்து போயுள்ளார்.
இதற்கு காரணம் மதுர் ராகேஜாவுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு வேலை ஒன்று கிடைத்துள்ளது தான். முன்னதாக, அமேசான், Cognizant, Optum உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்தும் வேலை ஆஃபர், மதுருக்கு வந்துள்ளது. ஆனால், அவற்றை நிராகரித்த இளைஞர், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வேலையை தேர்வு செய்துள்ளார்.
இது தொடர்பாக பேசும் மாணவன் மதுர் "எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தொழில்நுட்பம் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதற்கு காரணம், அதுதான் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். இதனால் அந்த துறையில் ஏதாவது நானும் ஒன்றை சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி இருக்கும் போது தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தகவல் தொடர்பான பிரிவு ஒன்று இருப்பதை நான் அறிந்தேன். அதன் பின்னர், அதனை தேர்ந்தெடுத்து நான் பி டெக் படிக்கவும் செய்தேன். மேலும் எனது படிப்புக்கு பின்னர், சில நிறுவனங்களில் நான் வேலைக்கு சேர வேண்டும் என ஏற்கனவே பட்டியலிட்டு வைத்திருந்தேன். அதில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒன்றாக இருந்தது.
தொடர்ந்து அதற்கான நேர்காணல்களுக்கு தயாராகவும் நான் முயற்சிகளை மேற்கொண்டேன். மைக்ரோசாஃப்ட் தவிர மாவட்டம் அமேசான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் எனக்கு வேலை தந்தது. ஆனால் என்னுடைய பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே இருந்ததால் அங்கு பணிக்கு சேர வேண்டும் என முடிவு செய்தேன்" என்றும் மதுர் தெரிவித்துள்ளார்.