கல்யாண வீட்டில் சொந்தக்காரருடன் செல்ஃபி எடுத்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்.. கோவையில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உறவினருடன் செல்ஃபி எடுத்த மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ‘வாஷிங் மெஷினில் இருந்த சாவி’.. கோழிப்பண்ணையில் வேலை பார்த்த பெண் செஞ்ச காரியம்.. ஷாக் ஆன குடும்பம்..!
கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் ஜான் (49 வயது). இவரது மனைவி கிரேஸ் பியூலா (33 வயது). தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி கிரேஸ் பியூலாவின் சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் திருமண வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது.
மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான், மீண்டும் திருமண நிகழ்ச்சியில் செல்ஃபி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த எட்வர்ட் ஜான் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தில் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கும் செல்போன் மூலம் தகவலை தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ்ச்செல்வி, உடனே மகளின் வீட்டுக்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
