மெட்ரோவில் நிரம்பி வழிந்த கூட்டம்.. மனைவியுடன் செல்பி எடுக்க போராடிய கணவர்.. வைரலாகும் கியூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமெட்ரோ ரயிலில் தனது மனைவியுடன் செல்பி எடுக்க போராடிய கணவரின் கியூட் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செல்போன்களின் வளர்ச்சி நம்ப முடியாத வேகத்தில் வளர்ந்துவருகிறது. பட்டன் போன் புழக்கத்தில் வந்தபோது, அதனை வியப்போடு பார்த்த நாம் அதன்பின்னர் ஸ்மார்ட்போன் வருகையையும் கொண்டாட தவறவில்லை. இன்றைய தினத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில், கேமராக்களுக்காகவே போன்களை தேர்ந்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் செல்பி வசதி பயன்பாட்டிற்கு வந்த பிறகு, மக்களின் ரசனைகள் பெரியளவில் மாற்றம் கண்டுள்ளது.
புதிய இடங்களில், வாழ்வின் முக்கியமான தருணங்களில், நமக்கு பிடித்தவர்களுடன் இருக்கையில் என செல்பி எடுக்கப்படுவதற்கான காரணங்களும் நிறையவே இருக்கின்றன. இந்நிலையில், தனது மனைவியுடன் செல்பி எடுக்க போராடும் மத்திய வயதுடைய கணவர் ஒருவரின் கியூட் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மெட்ரோவின் மத்தியில்
மேத்திவ் பென்னி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில், நகரும் மெட்ரோ ரயிலில் கணவன் மனைவி எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கின்றனர். மத்திய வயதுடைய கணவர் தனது மனைவியுடன் செல்பி எடுக்க முயற்சிக்கிறார். இதனையடுத்து, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த பெண்ணும் தனது மூக்குக்கண்ணாடியை கழற்றிவிட்டு, போனையே பார்க்கிறார்.
யாராவது தங்களை பார்க்கிறார்களா? என நோட்டம்விட்டுக்கொண்டே, தனது மனைவியுடன் செல்பி எடுக்க முயற்சித்து இறுதியில் அதில் வெற்றியும் அடைகிறார் அந்த கணவர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அன்பின் வெளிப்பாடு
இந்த வீடியோவை இதுவரையில் 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் "இது தூய அன்பின் வெளிப்பாடு" எனவும் "கியூட் வீடியோ" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இதனிடையே, "செல்பி கேமரா மூலமாக எடுக்காமல் எதற்காக போனை திருப்பி போட்டா எடுக்கிறார்?" என கேள்விகளையும் எழுப்பிவருகின்றனர் நெட்டிசன்கள்.

மற்ற செய்திகள்
