கடந்த 'ஆறு போர்களில்' இறந்தவர்களைவிட... 'கொரோனாவால்' அதிகமானோரை 'பறிகொடுத்த அமெரிக்கா...' 'பலி' எண்ணிக்கை '14 ஆயிரத்தைக்' கடந்தது...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 08, 2020 08:38 AM

அமெரிக்காவில் கடந்த ஆறு போர்களில் ஏற்பட்ட உயிரிழப்பை விட, கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

america met more loses from corona comparing to war

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா  மாறியுள்ளது. அங்கு 4 லட்சத்து 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா கடந்த 1775ம் ஆண்டுக்கு பிறகு எதிர்கொண்ட 6 போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க புரட்சி, 1812 ஆம் ஆண்டுப் போர், இந்தியப் போர்கள், மெக்ஸிகோ போர், ஸ்பானிய - அமெரிக்கப் போர் மற்றும் வளைகுடாப் போர் ஆகிய ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 961 ஆகும். ஆனால் கொரோனா இதுவரை 12 ஆயிரத்து 854 பேரை பலி கொண்டிருக்கிறது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவு நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

நியூயார்க்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பும் 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டாம் இடத்தில் நியூஜெர்சி மாகாணமும், மூன்றாம் இடத்தில் மிக்சிகன் மாகாணமும் உள்ளது.

கலிஃபோர்னியாவில் கொரோனாவால் 16 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 385 பேர் இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் லூசியானா மாகாணத்தில் 14 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.