‘சடலங்களால் நிரம்பி வழியும் இறுதிச் சடங்கு கூடங்கள்’... ‘ஒரு வாரத்திற்கு முன்பே புக் செய்யப்படும் கல்லறைகள்’... ‘திணறும் இடுகாடு நிர்வாகிகள்’... ‘அமெரிக்காவை துடைத்து எடுக்கும் துயரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதால் இறுதிச்சடங்கு நடத்தும் கூடங்கள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன.
சீனாவை விட, கொரோனாவால் இத்தாலி, ஸ்பெயின் நாட்டிற்கு அடுத்து அமெரிக்கா தான் மோசமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கல்லறைகள், தகனக்கூடங்கள் ஆகியவை ஒரு வாரம் அல்லது சில நேரங்களில் 2 வாரங்களுக்கு முன்பே கூட முன்பதிவு செய்யப்படுவதாக, ப்ரூக்கிளின் கல்லறை உரிமையாளரான பேட் மோர்மா தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் சடலங்களை கையாள முடியாமல் அமெரிக்கா திணறி வருவதுடன் கல்லறை, தக இடங்கள் கிடைக்காமல் அந்த கூடங்களுக்கு வெளியே டிரக்குகளில் குளிர்சாதனப் பெட்டி அமைத்து சடலங்களை வைத்துள்ளன.
பேட் மேர்மோ கூறுகையில், கடந்த 5 நாட்களில் 5 ஆண்டு அனுபவத்தை பெற்று விட்டதாக தெரிவித்துள்ளார். வழக்கமாக 40 முதல் 60 சடலங்களை கையாளும் நிலையில் நேற்று காலை 185 சடலங்கள் இறுதிச் சடங்கிற்காக காத்துக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் நிகழும் அவலத்தைக் காணும் பேட் மோர்மோ, கொரோனா வைரஸ் மனிதர்களின் சமன்பாட்டில் இருந்து மதத்தை நீக்கி விட்டதாகக் கூறுகிறார்.
ஒருபக்கம் மருத்துவமனைகள் கொரோனாவால் உடலை அடக்கம் செய்வதற்கும், எரிப்பதற்கும் அனுப்பி கொண்டே இருப்பதால், தாங்கள் கடுமையான சோதனையை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 2 லட்சத்து 45 ஆயிரம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 6098 பேர் உயிரிழந்தும் 10,441 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நியூயார்க்கில் மட்டும் 1500 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.