‘கொரோனா வைரஸ் கோர தாண்டவம்’... ‘ஒரே சிறையில் அளவுக்கு அதிகமான பாதிப்பால்’... 'செய்வதறியாது திகைத்துள்ள அதிகாரிகள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவின் பிடியில் சிக்கி செய்வதறியாது திகைத்து வரும் அமெரிக்காவின் சிகாகோவில் ஒரு சிறையில் மட்டுமே 400 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது அந்நாட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அமெரிக்கவில் கொரோனா வைரசுக்கு இதுவரை 14,797 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 4,35,160 ஆக உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சிறைகளில் அதிக அளவில் கொரோனா தொற்றுக்கு சிகாகோவில் உள்ள சிறைக்கைதிகள் மற்றும் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகாகோவில் குக் கவுண்ட்டி சிறையில் சுமார் 4,700 கைதிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் ஆப்பிரிக்க - அமெரிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 251 கைதிகள் மற்றும் 150 சிறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைதிகளில் 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் குணமடையும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு கைதியை கொரோனா வைரஸ் பலி வாங்கியுள்ளது. இதையடுத்து இந்தச் சிறையில் விசாரணைக் கைதிகள் பலர் ஸ்க்ரீன் செய்யப்பட்டு இவர்களில் வன்முறை குணமற்றவர்கள் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் என்னசெய்வதென்று தெரியாமல் சிறை அதிகாரிகள் திகைத்துப் போயுள்ளனர்.
