'கிம் எங்கிருக்கிறார் என்பது...' 'எங்களுக்கு மட்டுமே தெரியும்...' 'தென்கொரிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த முக்கியத் தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்வடகொரிய அதிபர் கிம் ஜாங் இருக்கும் இடம் தெரியும் என தென்கொரிய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து தனக்கு தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில், கிம் உடல்நிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, கிம் குறித்த தகவல்கள் விரைவில் உலகிற்குத் தெரியவரும் என்றும் கூறினார். இதுபற்றி எதுவும் பேச முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தென்கொரிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அந்நாட்டு அமைச்சர் கிம் யியான் சுல், கிம் ஜாங் உன்னின் இருப்பிடம் குறித்து தென்கொரிய அரசு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் உயிருடன்தான் உள்ளார் எனத் தெரிவித்தார். மேலும், கிம் ஜாங் உன்னின் உடல் நிலை பற்றி மட்டுமே அமெரிக்காவுக்குத் தெரியும் என்றும் அவரது இருப்பிடம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறியுள்ளார்.
கிம் ஜாங் உன் தொடர்பாக பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவர் இருக்கும் இடம் தெரியும் என அமெரிக்காவும், தென்கொரியாவும் விளக்கம் அளித்துள்ளது முக்கியமான தகவலாக பார்க்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு இப்படித்தான் கிம் திடீரென இப்படித்தான் மாயமானார், பிறகு அவரே திரும்பி வந்தார். கிம் தொடர்பான சந்தேகங்களுக்கு அவரே வந்து விடையளித்தால் உண்டு.
