அவரோட 'ஹெல்த்' கண்டிஷன் பத்தி... எனக்கு 'நல்லா' தெரியும்... "ஆனா 'சொல்ல' மாட்டேன்"!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Apr 28, 2020 06:51 PM

கொரோனா வைரஸ் தொற்று மூலமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிப்படைந்த நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Trump said that he know about the health condition of Kim Jong Un

இதனையடுத்து அமெரிக்க அரசு வைரசைத் தடுக்க நடவடிக்கைகள் பெரிதாக மேற்கொள்ளவில்லை என ஒரு பக்கம் விமர்சனம் இருக்க மறுபக்கம் கொரோனா வைரஸ் பரவி தங்களது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்பட சீனா வேண்டுமென்ற இந்த வைரஸை பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பல நாடு அதிபர்கள் குற்றஞ்சாட்டினர். விரைவில் சீனாவை எதிர்த்து நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

மேலும் பல தொடர் சர்ச்சைகளால் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருந்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் மீண்டும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது வடகொரியா அதிபரான கிம் ஜான் உங் பற்றி தனக்கு தகவல் தெரியும். ஆனால் அதனை தற்போது தெரிவிக்கமாட்டேன் என அவர் கூறியுள்ளார். மேலும், கிம் ஜான் நலமுடன் இருப்பதாக தான் நம்புவதாகவும், விரைவில் அதுகுறித்த தகவல் தெரிய வரும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க அதிபராக தான் இருந்திருக்கா விட்டால் வடகொரியாவும் அமெரிக்காவும்  இடையில் போர் மூண்டிருக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.