'கொரோனா' கிருமிகளை அழிக்க 'நாசாவின்' புதிய 'தொழில்நுட்பம்...' 'வைரஸ்களை' முற்றிலும் 'அழிக்கும்' திறன் கொண்டது என 'விளக்கம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் கிருமிகளை அழிக்க புதிய தொழில்நுட்பத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது.
விண்வெளியில் பல்வேறு சார்ஜ்டு பார்டிக்கிள்ஸ் இருப்பதால் அவை விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பாதிக்க வாய்ப்புண்டு. சிறிய அளவில் பாதிக்கப்பட்டாலும், விண்வெளி வீரர்களின் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளதால், அவற்றிலிருந்து பாதுகாக்க பல்வேறு தொழில்நுட்பங்களை நாசா கண்டுபிடித்துள்ளது.
பொதுவாக விண்வெளிக்குச் செல்வோர், பல்வேறு பணிகளுக்காக விண்கலனை விட்டு பாதுகாப்பு உடைகளுடன் வெளியே செல்வது வழக்கம். விண்நடை மேற்கொண்டு பணிகளை முடித்த பின்னர் விண்கலனுக்குள் வரும் போது இந்த கிருமி நீக்க கருவிகளைக் கொண்டு அவர்கள் தனி அறையில் சுத்தப்படுத்தப்படுவர். இது அதிக சக்திவாய்ந்த கிருமிநாசினி என்பதால் இவற்றை கொரோனா கிருமி நாசினியாக பயன்படுத்த நாசா பரிந்துரைத்துள்ளது.
இந்த கருவியை முதலில் பள்ளிகள், சிறைச்சாலைகள் போன்ற பொதுவான இடங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவிகளைக் கொண்டு மிக எளிதாக கிருமி நீக்கம் செய்யலாம் என நாசா அமைப்பின் தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் (Jim Bridenstine ) கூறியுள்ளார்.
கிருமிநீக்கம் செய்ய வேண்டிய அறைக்குள் இந்தக் கருவியை வைத்தால் அதிலிருந்து வெளிவரும் பனிமூட்டம் போன்ற புகை அங்குள்ள அத்தனை கிருமிகளையும் அழித்து விடும் என்று ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.