‘10 நாட்களில் இருமடங்காக அதிகரிப்பு’... ‘வரலாறு காணாத பேரிழப்பு துயரத்திலும்’... ‘எதிர்ப்பை மீறி அதிர்ச்சி கொடுக்கும் நாடு’!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து உச்சத்தை எட்டிவரும் நிலையில், ஊரடங்கு விஷயத்தில் எதிர்ப்பையும் மீறி சில மாகாணங்களில் முன்பு சொன்னப்படியே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 50,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு, அமெரிக்காவே அதிகளவில் பலிகடா ஆகியுள்ளது. கடந்த 10 நாட்களில் அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிவேகத்தில் இருமடங்காக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா முடக்கத்தால், வேலைகள் பறிபோய், பரிசோதனை செய்வதில் ஏற்பட்டுள்ள சுணக்கம் காரணமாக, தொற்று எண்ணிக்கை இப்போது கிடைத்துள்ள புள்ளிவிபரங்களை விடவும் அதிகளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், ஊரடங்கு விஷயத்தில் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துமே அவசரம் காட்டாமல் பொறுமையாக ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம், ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து அமெரிக்காவின் சில மகாணங்களில் பொருளதார தேவையை பூர்த்தி செய்வதற்காக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். சொன்னதுப்போலவே அமெரிக்காவின் 3 மாகாணங்களில் சிலப் பகுதிகளில், ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஜிம், முடி திருத்தும் சலூன், பார்லர், டாட்டூ பார்லர், உணவங்கள் உள்ளிட்ட சில கடைகள் சமூகவிலகலுடன் திறக்க இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாகாணங்களிரும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
