‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 23, 2020 08:17 PM

வடகொரியாவில் நிகழும் இரண்டுவிதமான பீதிகளால், உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி பதுக்கி வைத்ததால், உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

North Korean is witnessing an extreme shortage of food after panic

சீனாவில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதுமே, கடந்த ஜனவரி மாதமே அண்டை நாடான வடகொரியா தனது நாட்டின எல்லையை மூடியது. உலக நாடுகள் எல்லாம் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில், வடகொரியாவில் கொரோனா குறித்த பாதிப்பு இதுவரை வெளிவராத மர்மமாகவே உள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவிற்கு கடும் சவால் கொடுக்கும் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டது முதல் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக செய்தி வெளியானது.

இதுகுறித்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் அதிபர் கிம் பற்றிய இந்தச் செய்தி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக அந்நாட்டின் தலைநகர் பியோங்யாங்கில் மக்கள் அதிக அளவில் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்கிச் சென்றதால், முதலில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பின் ஒரு சில நாட்களில் உள்நாட்டுச் சாமான்களுக்கும் தட்டுப்பாடு வந்துவிட்டது என அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில் சொல்லப்படுகிறது.

கடந்த வாரமே ரேடியோ ப்ரீ ஏசியா நிறுவனம் வெளியிட்ட தகவலில் வட கொரியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுவந்த உணவுப் பொருட்களின் விலை திடீரென அதிகமாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிம் உடல்நலமில்லாத நிலையில், அவரது பரம்பரையினர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும்போது வன்முறை வெடிக்கக்கூடும் என்ற யூகங்களும் நிலவுகின்றன.

மேலும் அதிபர் கிம் உடல்நலமில்லாத நிலையில், அவரது பரம்பரையினர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும்போது வன்முறை வெடிக்கக்கூடும் என்ற யூகங்களும் நிலவுகின்றன. ஏற்கனவே, வட கொரியாவில் உணவுத் தட்டுப்பாடு என்பது புதிதல்ல. 1990-களில் ஏற்பட்ட பஞ்சத்தில் அந்நாட்டு மக்களில் 10 சதவீதம் பேர் பட்டினியாகக் கிடந்து மடிந்தனர். அங்குள்ள மக்களில் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்தின்றி காணப்படுவதாக உலக உணவு திட்ட அமைப்பு கூறியுள்ளது.