"மிஸ்டர் டிரம்ப், நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க"... 'WHO'வின் பேச்சைக் கேட்காமல்... தனி 'டிராக்'கில் பயணிக்கும் அமெரிக்க 'அதிபர்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Apr 23, 2020 04:21 PM

உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா தரும் நிதியை தடுத்து வைத்துள்ள அதிபர் டிரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

WHO requests America to help in Financial Issues

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல உலக நாடுகள் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன. சீனா ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். சீனா வேண்டுமென்று தான் கொரோனா வைரசைக் கட்டுப்டுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவாக செயல்படுவதாக கூறி உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். தங்களது இந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என பலர் டிரம்பிடம் கோரிக்கை விடுத்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அவர்களும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார். நீங்கள் அளித்து வந்த நிதி மற்ற நாடுகளுக்கு மட்டுமில்லாமல் அமெரிக்காவிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா வைரஸ் நீண்ட நாள் நீடிக்கவுள்ளதால் அமெரிக்கா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நீண்ட நாட்களுக்கு உலக மக்களை அச்சுறுத்தும் எனவும், அதனுடன் இணைந்து நாம் இன்னும் நீண்ட நாட்கள் பயணிக்க உள்ளதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் டெட்ரோஸ் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.